
சமீப காலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட ஐடி விங் துணை அமைப்பாளர் அகரம் விக்னேஷ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பொது மேடையில் ஜனநாயகம், கருத்துரிமை பேசும் நீங்கள் கட்சியில் அது உள்ளதா? என ஆராய சீமானுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் உழைத்தவர்களை ஓரம் கட்டுவது கட்சியை எந்த நிலைக்கு அழைத்துச் செல்கிறது என்று உணர்ந்ததாகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.