ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கட்சி போட்டியிடும் நிலையில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக போட்டியிடுகிறார். முதல் முறையாக இந்த தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி உறவாகியுள்ள நிலையில் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கூறி அவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இது பற்றி அவர் பேசியதாவது, உன் பெரியாரிடம் வெங்காயம் தான் உள்ளது. ஆனால் என் ‌ தலைவனிடம் வெடிகுண்டே உள்ளது. நீ என் மீது வெங்காயத்தை வீசினால் உன் மீது நான் வெடிகுண்டை வீசுவேன். நான் வெடிகுண்டை வைத்துள்ளேன் இன்னும் வீசவில்லை. நான் மட்டும் வெடிகுண்டை வீசினால் உன்னை புதைத்த இடத்தில் புல் கூட முளைக்காது என்று கூறினார். மேலும் பெரியார் பற்றி சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நிலையில் தற்போது வெடிகுண்டை வீசுவேன் என்று அவர் மிரட்டல் விடும் விதமாக பேசியுள்ளதால் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.