
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை டெல்லி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில் இன்று மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும் இதனை ஏற்றுக் கொண்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் நடத்தி வந்த போராட்டத்தை தற்போது வாபஸ் வருவதாக அறிவித்துள்ளனர். அதன்படி கொல்கத்தா உட்பட நாடு முழுவதும் மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.