
தமிழகத்தில் சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்தது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் ஏராளமான மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்ததோடு தேர்ச்சி விகிதமும் அதிகரித்து இருந்தது. இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் மொத்தம் 88.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 16,92,794 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 14,96,307 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வு முடிவுகளை cbse.gov.in, cbseresults.nic.in மற்றும் results.cbse.gov.in ஆகிய இணையதளங்களில் இந்த தேர்வு முடிவுகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது விஜயவாடாவில் அதிகளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் திருவனந்தபுரமும், மூன்றாம் இடத்தில் சென்னையும் இருக்கிறது. மேலும் சென்னையில் மட்டும் 97.39 சதவீதம் தேர்ச்சி பதிவாகியுள்ளது.
Central Board of Secondary Education (CBSE) declares Class XII results.
CBSE Class 12 results: 88.39% of students pass the board exams. Passing percentage increased by 0.41% since last year.
Girls outshine boys by over 5.94% points; over 91% girls passed the exam. pic.twitter.com/LjDqMa4iw8
— ANI (@ANI) May 13, 2025