நாடாளுமன்றத்தில் இன்று ஒரே நாடு ஒரே ‌ தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதாவது ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் மாநிலத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நாளில் தேர்தல் நடைபெறும். இதைத்தொடர்ந்து அடுத்த 100 நாட்களில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறும். இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய நிலையில் இன்று மசோதா நாடாளுமன்ற மக்களவையில்  தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இதற்கு எதிர்கட்சிகள் தற்போது கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.