
நாடு முழுவதும் முழுவதும் பாஜகவில் முக்கிய தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜகவிலும் புதிய தலைவர் விரைவில் தேர்வு செய்யப்பட இருக்கிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலையை தேசிய மேலிடம் நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், சட்டப்பேரவையில் அவரிடம் சென்று பேசிய அதிமுக எம்.எல்.ஏ.க்கள். ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜு இருவரும் அவையின் உள்ளே நயினார் நாகேந்திரன் இருக்கைக்கே சென்று சுமார் 10 நிமிடம் அமர்ந்து பேசியுள்ளனர்