தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகின்ற 22ஆம் தேதி வைகாசி விசாகம் விமர்சையாக நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வருகை புரிவார்கள்.

இதன் காரணமாக வருகின்ற மே 22ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்ய ஜூன் 8-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்றும் கலெக்டர் அறிவித்துள்ளார்.