
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பிரபலமான திரௌபதி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் வீதியில் தேர் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக உயர் மின்னழுத்த கம்பியின் மீது தேர் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தேருடன் வந்த ராம்குமார் என்ற 24 வயது வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் தேர் முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.