திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணியில் அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சி இணைந்துள்ளது. இன்று இபிஎஸ் உடனான பேச்சு வார்த்தையில் கூட்டணியை உறுதி செய்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் கதிரவன், தேனி அல்லது ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்க வலியுறுத்தியுள்ளார். ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் வைத்து முக்குலத்தோர் வாக்குகளை பெற்று விடலாம் என்ற பாஜகவின் கணக்குக்கு இந்த கூட்டணி முட்டுக்கட்டை போட்டு உள்ளது.