
திமுக கட்சியின் எம்.பி தயாநிதிமாறன் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அதாவது நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தன்னுடைய கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தயாநிதிமாறன் தன்னுடைய தொகுதிக்காக ஒதுக்கப்பட்ட 75% நிதியை பயன்படுத்தவில்லை. அப்படி என்னில் அவர் எந்த மாதிரி செயல்பட்டு இருப்பார் என்பதை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக தயாநிதி மாறன் அவதூறு பேசியதாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜர் ஆனார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி தனக்கு எதிரான குற்றங்களை மறுப்பதாகவும் விசாரணையை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும் கூறினார். இதைதொடர்ந்து இந்த வழக்கு செப்டம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.