தென் கொரியாவில் உள்ள புசான் விமான நிலையத்திலிருந்து பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென புகை வெளியேறி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு விமானத்தில் இருந்த 169 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 176 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.