
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் உள்ள விசாலை என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு மாலை 4 மணி அளவில் தொடங்கும் நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு இன்று இரவே நடிகர் விஜய் மாநாட்டு திடலுக்கு செல்வதாக தகவல் வெளிவந்துள்ளது. மாநாட்டுக்கான இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மாநாடு நடைபெறும் நினைவாக 100 உயரத்தில் அந்த இடத்தில் நிரந்தர கொடிக்கம்பம் ஒன்று நிறுவப்பட உள்ளது.
அதன் பிறகு சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் நாட்டின் நன்மைக்காக பாடுபட்ட பல தியாகிகளின் கட்டவுட் அங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நடிகர் விஜய்க்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது நாளை முதல் மாநாடு நடைபெறும் நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்திலிருந்து 100-க்கும் மேற்பட்டோர் திடீரென விலகியுள்ளனர். அவர்கள் பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் பாமக கட்சியில் இணைந்துள்ளனர். மேலும் நாளை மாநாடு நடைபெறும் நிலையில் திடீரென தமிழக வெற்றிக்கழகத்தில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் விலகியது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.