தமிழ்நாட்டில் 2025 26 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தற்போது அறிவித்துள்ளார். சமீபத்தில் தான் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்குதல் செய்தது. இதைத்தொடர்ந்து மாநிலங்களிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தற்போது சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில்அடுத்த மாதம் 13ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் அதனை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழக சட்டசபையில் பட்ஜெட் தொடர்பாக கருத்து கேட்பு நடத்தப்பட இருக்கிறது.

இன்று ஊரக வளர்ச்சி துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து நாளை வணிகவரித்துறை உள்ளிட்ட துறைகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. மேலும் பிப்ரவரி 20ஆம் தேதி சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதன் மூலம் துறை சார்ந்த தேவைகள் என்ன என்பது விரிவாக தெரியவரும். இதன் அடிப்படையில் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் இணைக்கப்படும்.