தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் இருப்பது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது உகந்ததல்ல என கூறியது. இந்நிலையில் தற்போது ஆளுநர் ரவி தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய இரண்டு தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். மேலும் அதன்படி

ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் மற்றும் கனிமங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது ஆகிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதேபோன்று  28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை அரசு நியமிப்பது தொடர்பான சட்ட மசோதாவுக்கும் ஒப்புதல் வழங்கியுள்ளார். இது கடந்த ஜனவரி மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தமிழ்நாட்டில் கனிமங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.