
தமிழக அரசில் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு மூன்றாவது இடம் வழங்கப்படுவதாக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 2ஆவது இடத்தில், மற்றும் உதயநிதி 3ஆவது இடத்தில் உள்ளார்.
அதோடு, 19ஆவது இடத்தில் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட ஆர். ராஜேந்திரன், 21ஆவது இடத்தில் செந்தில் பாலாஜி, 27ஆவது இடத்தில் கோவி. செழியன், 29ஆவது இடத்தில் நாசர் ஆகியோர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.