
தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. மின்வாரிய வரி ஏய்ப்பு தொடர்பாக மின்வாரிய ஒப்பந்த நிறுவனங்களில் சுமார் 250க்கும் மேற்பட்ட IT அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. இதற்காக 20 ஆண்டுகால தகவல்கள் திரட்டப்பட்டு அதன் அடிப்படையில் சோதனை தொடர்வதாக கூறப்படுகிறது.