
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனியார் பள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். அதன்படி அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் தான் தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும்.
இதை மீறி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அதிக கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். மேலும் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறையை நீடிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.