திருச்சியில் நேற்று இரவு பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அவருடைய மனைவி ராகினிக்கும் அரிவாள் விட்டு விழுந்தது. அதாவது முன்விரோதம் காரணமாக ஆட்டுக்குட்டி சுரேஷ் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி ஜம்புகேஸ்வரனை காவல்துறையினர் கைது செய்வதற்காக சென்றனர். அப்போது அவர் காவலர் ஒருவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றார்.

இதனால் ஸ்ரீரங் கத்தில் வைத்து அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதில் காயமடைந்த ஜம்புகேஸ்வரர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை ஏற்கனவே ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஏற்கனவே ரவுடி திருவேங்கடம் மற்றும் காக்கா தோப்பு பாலாஜி ஆகியோர் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்ட நிலையில், ரவுடிகள் மீது அடுத்தடுத்து என்கவுண்டர் நடவடிக்கைகள் பாய்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.