தமிழ்நாட்டில் 2024-25 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையில் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கூடுதலாக 20,040 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு இளநிலை பாடப்பிரிவில் புதிதாக 8 பாடங்களும், முதுநிலை பாடப்பிரிவில் புதிதாக 10 பாடங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், தகவல் அறிவியல் உள்ளிட்ட கணினி அறிவியல் சார்ந்த 15 பாடப்பிரிவுகளில் 22,248 இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.