தமிழகத்தில் நேற்று திமுக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிலையில் இன்று 5-வது முறையாக வேளாண்மை முறையாக வேளாண் பட்ஜெட் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை அந்த துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வேளாண்மை துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

நிலம் அற்ற உழவர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்காக விபத்து மற்றும் மரணத்திற்கான இழப்பீடு தொகை ஒரு லட்ச ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இதேபோன்று இயற்கை மரணத்திற்கான நிதி உதவி முப்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் இறுதிச் சடங்கிற்கான நிதி உதவி உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்