
சிவகங்கை மாவட்டம் நாட்டாக்குடி அருகே அதிமுக கட்சியின் கிளைச் செயலாளர் கணேசன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் இன்று காலை தன்னுடைய கடையை திறக்க சென்ற நிலையில் அங்கு சென்ற மர்ம நபர்கள் அவரை வெட்டி படுகொலை செய்துவிட்டனர்.
அவருடைய உடலை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள நிலையில் விசாரணை நடைபெறுகிறது. மேலும் தீபாவளி முடிந்த நாளிலிருந்து சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து 3 கொலைகள் அரங்கேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.