வடக்கு வங்க கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும் இதனால் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் இன்று முதல் செப்டம்பர் எட்டாம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றும் நாளையும் கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இடி உன்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் மற்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.