தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் அதி கன மழை பெய்யக்கூடும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையும் நீலகிரி மற்றும் கோவையில் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
