
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் குறைந்து இருப்பதால் தடை நீக்கப்பட்டதாக அதிகாலையிலேயே அறிவிப்பு வெளியாகி உள்ளது.