சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 68,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 8560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 9338 ரூபாய்க்கும், ஒரு சவரன் 74 ஆயிரத்து 704 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 112 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.