இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வருகிற ஜூன் மாதம் 20-ஆம் தேதி இந்தியா இங்கிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. அதன்படி சுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரிஷப் பண்ட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில்  சுப்மன் கில்(கேப்டன்), ரிஷப் பண்ட்(துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.