ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 22 ஆம் தேதி தொடங்கும் நிலையில் அந்த போட்டியில் ரோகித் சர்மா கலந்து கொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது சமீபத்தில் ரோஹித் சர்மாவுக்கு 2-வதாக ஆண் குழந்தை பிறந்தது. இதன் காரணமாக அவர் முதலாவது டெஸ்ட் போட்டியில் மட்டும் கலந்து கொள்ள மாட்டார். இதன் காரணமாக தற்போது முதலாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் புதிய கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என்றும் அதற்கு அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியுடன் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.