காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் மூலமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்தது.

இதன் காரணமாக பாகிஸ்தான் இந்தியா மீது தொடர்ந்து நேற்று மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக வானத்தில் வைத்து அழித்தது. இருப்பினும் ஆங்காங்கே சிறுசேதங்கள் இருக்கிறது. இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீரில் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அரசு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

அதாவது மாவட்ட வளர்ச்சித்துறை கூடுதல் ஆணையர் ராஜ்குமார் தப்பா என்பவர் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக அந்த மாநில முதல்வர் உமர் அப்துல்லா உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துள்ளார்.