
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இந்த தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து தகர்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் நேற்று காஷ்மீர், ராஜஸ்தான், அமிர்தசரஸ், சண்டிகர் என எல்லையோரம் இருக்கும் மாநிலங்களில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
இதன் காரணமாக இந்தியாவின் முழ்படைகளும் களத்தில் இறங்கி அந்த தாக்குதல்களை முறியடித்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள கராச்சி, ராவல்பிண்டி உட்பட பல முக்கிய இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியதில் அவர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் பாகிஸ்தான் தொடர்ந்து மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு நூற்றுக்கணக்கான ட்ரோன்களை இவி பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில் அனைத்தையும் இந்திய ராணுவ முறியடித்தது. இதேபோன்று தற்போதும் ஜம்மு எல்லைக்கு அப்பாலில் இருந்து டிரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதை நம்முடைய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதேபோன்று பஞ்சாப் எல்லை பகுதிகளிலும் பாகிஸ்தானின் தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வர் உமர் அப்துல்லா தற்போது தன்னுடைய x பக்கத்தில் இடைவிடாமல் பயங்கர சத்தங்கள் கேட்கிறது என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்தியா அந்த தாக்குதல்களை முறியடித்து வருவதால் அது தொடர்பான சத்தங்கள் கேட்கலாம் என்று கூறப்படுகிறது.