
ஜப்பானில் உள்ள நிஹான் ஹிடான்க்யோ அமைப்பு 2024 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளது. இந்த அமைப்பு இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணி குண்டு வீசப்பட்டதில் உயிர் தப்பியவர்களின் சமூகமாகும். இவர்கள், அணு ஆயுதங்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் பெரும் பங்காற்றியதற்காக இந்த பரிசை பெற்றுள்ளனர். ஹிபாகுஷா என அழைக்கப்படும் இந்த உயிர் தப்பியவர்கள், அணு ஆயுதங்கள் உலகில் மீண்டும் பயன்படுத்தப்படக்கூடாது என்ற ஆவலைத் தங்கள் சாட்சியங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
நோபல் அமைதி பரிசுக்கான அறிவிப்பின் போது, நிவேஜியன் நோபல் கமிட்டி, உலகம் முழுவதும் அணு ஆயுதங்களின் அபாயம் மீண்டும் பெருகி வருவதால், இந்த அமைப்பின் பணி அவசியமாகும் என்று தெரிவித்தது. ஹிடான்க்யோ அமைப்பு அணு ஆயுதங்களை முற்றிலும் அகற்றுவதற்காக கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறது. இது 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது மற்றும் அரசின் நஷ்ட ஈடு கோரல்களையும் அணு ஆயுத எதிர்ப்பையும் முன்வைத்துள்ளது.
இந்த அமைதி பரிசு, அணு ஆயுதங்களை எதிர்த்துப் போராடியவர்களுக்கும் மற்றும் அணு ஆயுதம் காரணமாக பாதிக்கப்பட்ட உலகெங்கும் உள்ள மக்களுக்கும் ஒரு பேருதவியாகும். நிஹான் ஹிடான்க்யோ அமைப்பு, 2022-23 காலக்கட்டத்தில் உலக அமைதிக்காக பேராதரவாக அமைந்துள்ளது.