செங்கல்பட்டு மாவட்டம் காந்திநகர் பகுதியில் விமல் என்ற 22 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். அவரது நண்பர் ஜெகன் (24). இவர்கள் இருவரும் தங்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து நேற்று இரவு காந்திநகர் பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது நண்பர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவரை ஒருவர் அவர்கள் தாக்கி கொண்டனர். இந்த சண்டையின்போது திடீரென அடையாளம் தெரியாத ஒருவர் விமல் மற்றும் ஜெகன் இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழந்த ஜெகன் மற்றும் விமல் ஆகியோர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.