அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் எனவும் அப்போதுதான் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற முடியும் எனவும் 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து அதிமுக தோல்வியை சந்தித்து வருகிறது எனவும் கூறினார். அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்காவிடில் அந்தப் பணிகளை நாங்களே மேற்கொள்வோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செங்கோட்டையனின் இந்த கருத்திற்கு ஓ பன்னீர்செல்வம், பாஜக மாநில தலைவர் உள்ளிட்ட பலர் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் தற்போது சசிகலாவும் ஆதரவு கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கோட்டையனின் உடம்பில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என்பதை அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார். அதிமுக எந்த சக்தியாலும் அழிக்க முடியாத பேரியக்கம், ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம், நாளை நமதே என்று கூறியுள்ளார். மேலும் அதிமுகவுக்கு கஷ்டங்கள் ஏற்பட்ட காலங்களில் செங்கோட்டை என அதனை வலிமையோடு எதிர்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதோ அந்த அறிக்கை,
