உலகக்கோப்பை கோ கோ போட்டியில் முதல் முறையாக இந்திய மகளிர் அணி மற்றும் ஆடவர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதன்படி இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மகளிர் அணி நேபாளத்தை 78-40 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கியது.

இதேபோன்று இன்று டெல்லியில் நடைபெற்ற ஆடவர் கோ கோ இறுதிப்போட்டியில் நேபாளத்தை 54-36 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வீழ்த்தி உலக கோப்பையை வென்றுள்ளது. மேலும் முதல் முறையாக உலக கோப்பையை மகளிர் அணி மற்றும் ஆடவர் அணி வென்றுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.