
அதிமுக கட்சியின் சார்பில் நேற்று நடைபெற்ற மே தின விழாவில் கலந்து கொண்ட கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச்செயலாளர் அப்துல் ஜப்பார் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு முஸ்லிம்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்று கூறினார்.
அவருடைய இந்த பேச்சு சர்ச்சையாக மாறிய நிலையில் தற்போது அவரை கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர். மேலும் திடீரென அவர் ஜமாத் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.