
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் பிரமாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடை பிரிவில் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் 100 கிராம் எடைஅதிகமாக இருந்ததாக கூறி அவரை தகுதி நீக்கம் செய்துள்ளனர். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒலிம்பிக் கூட்டமைப்பு விக்னேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்தது மிகவும் வருத்தத்தை தரக்கூடிய விஷயமாக இருக்கிறது என்று கூறிய இருந்தது.
இந்நிலையில் வினேஷ் போகத் ஒரு அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மல்யுத்தம் தன்னை வென்றதாகவும் தான் தோற்று விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது தைரியத்தை இழந்து விட்டதாகவும் தனக்கு வலிமை இல்லை என்றும் குட் பாய் மல்யுத்தம் 2001-2014 என்றும் உணர்ச்சிப் பூர்வமாக அவர் பதிவிட்டுள்ளார்.