
கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிவராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதோடு 11 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். அதாவது போலியாக என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் காவல்துறையினர் சிவராமனிடம் விசாரணை நடத்துவதற்கு முன்பாகவே அவர் எலிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். அதன் பிறகு அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் உயிரிழந்துவிட்டார். மேலும் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.