காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.

வரும் 16ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை வினாடிக்கு 3000 கன அடி வீதம் நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்று குழு தற்போது பரிந்துரை செய்துள்ளது. அக்டோபர் 16ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை கன அடி தண்ணீர் ஆனது திறக்கப்பட வேண்டும் என்ற நிலையானது இருந்து வருகிறது. இந்த நிலையில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடுமையாக  விவசாயிகள் பாதிக்கப்படுகிற சூழல் உருவாகியுள்ளது. காரணம் காவேரியில் இருந்து திறக்கப்பட வேண்டிய நீர் என்பது சரியான நேரத்தில் திறந்து விடப்படவில்லை. கர்நாடகா அரசு தொடர்ந்து தாமதப்படுத்தி வருகின்றது.

இதனால் தமிழக விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காவிரி மேலாண்மை சந்திப்பு கூட்டத்தில் கூட தமிழக விவசாயிகள் சூழ்நிலை குறித்து  அதிகாரிகள் தெளிவாக விளக்கி உள்ளனர். நீதிமன்றத்திலும் கூட இது தொடர்பாக வழக்கு இருக்கின்றது அங்கும் தமிழகத்தின் நிலைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது காவிரி ஒழுங்காற்று குழுவானது தற்போது கர்நாடக அரசுக்கு பரிந்துரை கொடுத்துள்ளது. அதன்படி 15 நாட்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி நீரை திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு காவிரியில் 13000 அடி நீரை காவிரியில் இருந்து திறக்க கோரியிருந்த நிலையில், அதில் வெறும் 3000 கன அடி நீர் மட்டும் திறக்க பரிந்துரையானது கொடுக்கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு கூட தமிழக அரசு சார்பாக ஒருமனதாக காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த குழுவானது இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது.