தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் புரோகிராமர், சிவில் பொறியாளர், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், எம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளர், எஸ்எம்சி கணக்காளர், தரவு பதிவு அலுவலர், அலுவலக உதவியாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறையின் மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஊதிய உயர்வுஜூன் 1-ம் தேதியிலிருந்து அமலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரசுப் பணியில் இருந்துவிட்டு ஓய்வு பெற்ற பின்னர் ஆலோசகர் அல்லது உதவியாளராக பணியாற்றும் நபர்களுக்கு இவ்வூதிய உயர்வு பொருந்தாது என்றும், ஊதிய உயர்வுக்குத் தகுதி பெற குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் அவசியம் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த தீர்மானம், நீண்டநாட்களாக ஊதிய மேம்பாட்டை எதிர்நோக்கிய தொகுப்பூதிய ஊழியர்களுக்கு நம்பிக்கையையும் நிம்மதியையும் அளிக்கக்கூடியதாக காணப்படுகிறது.