உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர காசி அருகே பங்காளி பகுதியில் பயங்கர ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தனியாருக்கு சொந்தமான இந்த ஹெலிகாப்டரில் கங்கோத்திரி பகுதிக்கு இன்று காலை 9 மணியளவில் 7 பேர் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் 5 பேர் உயிரிழந்ததோடு 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.