கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்ததில் பலருக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 37 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது இருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளின் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழப்போர் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.