
கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 34 வருடங்களுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. மொத்தமுள்ள 233 தொகுதிகளில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் கர்நாடக முதல்வரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்த ராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வராக டி.கே சிவகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் மே 20-ம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.