
கர்நாடகா அமைச்சர் ராகவேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மகரிஷி வால்மிகி பழங்குடியின வளர்ச்சி வாரியத்தின் 88.62 கோடி முறைகேடாக பிற வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு அதிகாரி சந்திரசேகரன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ராகவேந்திராவுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.