தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கில், ஓபிஎஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஆட்சியாளர்களின் விருப்பப்படி லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகிறது, குற்ற வழக்கு விசாரணை கேலிக்கூத்து ஆக்கப்பட்டுள்ளது எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை அரசியலில் இருந்து விலகி தனித்துவமாக செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.