ஒரு கிலோ பூண்டு விலை 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் குடும்ப தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரத்து குறைவால் கடந்த சில நாட்களாக 400 முதல் 450 ரூபாய்க்கு விற்பனையான பூண்டு விலை இன்று 500 ரூபாயை எட்டியுள்ளது. மேலும் இஞ்சி 105 ரூபாய், ஊட்டி கேரட் 80 ரூபாய், அவரை முப்பது ரூபாய், பச்சை மிளகாய் 30, தக்காளி 30 ரூபாய், சின்ன வெங்காயம் 30 ரூபாய், பீன்ஸ் 30 ரூபாய், ஊட்டி பீட்ரூட் 50 ரூபாய், வெங்காயம் கிலோ 20 ரூபாய், முள்ளங்கி இருபது ரூபாய் மற்றும் வெண்டைக்காய் 35 ரூபாய்க்கு விற்பனையாகிறது.