ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்த தொடரில் சுமார் 8 அணிகள் கலந்து கொள்ளும் நிலையில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் போட்டிகள் நடைபெறும். இதில் இந்திய அணிக்குரிய போட்டிகள் மட்டும் பொதுவான இடத்தில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்த நிலையில் தற்போது இந்திய அணி மோதும் போட்டிகள் எங்கு எப்போது நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

அதன்படி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மோதும் போட்டிகள் மற்றும் துபாயில் நடைபெறும். குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டிக்கான அட்டவணையையும் ஐசிசி வெளியிட்டுள்ளது. இதோ அந்த அட்டவணை,