பிரபல நடிகர் பிரித்திவிராஜ் தற்போது எம்புரான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இது லூசிபர் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் இந்துக்களுக்கு எதிராக இருப்பதாக ஆர்எஸ்எஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதன் பிறகு படத்தில் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தவறாக காட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டும் என்று ராமதாஸ் மற்றும் சீமான் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

எம்புரான் படத்தில் சர்ச்சையான காட்சிகள் நீக்கப்பட்டு மீண்டும் படம் வெளியானதாக கூறப்படும் நிலையில் இதுவரை 200 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்நிலையில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலனின் வீட்டில் தற்போது வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது.

இதேபோன்று அவருடைய அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது. மேலும் அந்த படம் சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் வீட்டில் சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.