தமிழகம் வந்த அமித்ஷா அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து அறிவித்த நிலையில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம் என்றும் கூறினார். இதன் காரணமாக ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் நிலை என்ன என்று கேள்விக்குறி எழுந்துள்ள நிலையில் அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைவது சிக்கல் என்று கூறப்படுகிறது. ஏனெனில் எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை சேர்க்க மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறி வருவதால் அவர்கள் இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் ஓபிஎஸ் தற்போது தனி கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி தன்னுடைய ஆதரவாளரான ஜோதிமணி என்பவர் மூலம் ஓபிஎஸ் எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை பதிவு செய்துள்ளார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்காவிடில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் ஓபிஎஸ் தனி கட்சி தனித்து போட்டியிடும் அல்லது விஜய் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் என்று கூறப்படுகிறது.