காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டு தீவிரவாத முகாம்களை குறி வைத்து அழித்தது.

இதனால் பாகிஸ்தான் இந்தியாவின் மீது மூன்று நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதலை இந்தியா  வெற்றிகரமாக வான்வெளியில் வைத்து முறியடித்து வருகிறது. நேற்று ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு அரசு ஊழியர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்நிலையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ட்ரோனை சுட்டு வீழ்த்தும் வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதோடு இந்தியாவின் இறையாண்மையை பாகிஸ்தான் சீர்குலைக்க நினைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எதிரிகளின் சதித்திட்டத்தை ராணுவம் முறியடிக்கும்.

பஞ்சாப், அமிர்தரசில் உள்ள காசா காண்ட் என்ற இடத்தில் இன்று காலை 5 மணியளவில் பாகிஸ்தானின் ட்ரோன் கண்டறியப்பட்டதும் உடனடியாக சுட்ட வெடித்து விட்டோம் என்று இந்திய ராணுவம் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளது.