தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதே தயாராகி வருகிறது. குறிப்பாக மாற்றுக் கட்சியிலிருந்து பிற கட்சிகளுக்கு இணைபவர்களும் பரபரப்பாக பேசப்படுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் அமமுக கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இந்நிலையில் தற்போது முன்னால் எம்எல்ஏ விஜயகுமார் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். அதாவது தேர்தல் நெருங்குவதால் அதிமுகவிலிருந்து விலகி சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை தீவிர படுத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி மூத்த நிர்வாகிகளுக்கு அசைன்மென்ட் வழங்கியுள்ளாராம். மேலும் இந்த நிலையில்தான் தற்போது அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் மீண்டும் கட்சியில் இணைத்துள்ளார்.