தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் பல அறிவிப்புகளும் வெளியிடப்பட்ட நிலையில் தமிழக சட்டப்பேரவையில் 2023-24ஆம் மிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை விவசாய நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்ய உள்ளார். என் நிலையில் அவர் சற்று முன்பு அந்த பட்ஜெட் தாக்கலை சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் முன்பு வைத்து மரியாதை செலுத்தினார்.

கருணாநிதி அவர்களின் ஆசி பெறுவதற்காக அவர் இந்த பட்ஜெட் தாக்கல் வைத்து மரியாதை செலுத்தியதாக கட்சி நிர்வாகிகள் கூறினர். இதனைத் தொடர்ந்து இன்னும் சற்று நேரத்தில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம், உர மானியம் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் கடன், டெல்டா விவசாயிகளுக்கு சிறப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது.